என்பீல்டு நிறுவனம், ராயல் என்பீல்டுஹிமாலயன் 750 மற்றும் எலக்ட்ரிக் ஹிமாலயன் ஆகிய இரண்டு மோட்டார் சைக்கிள்களை அறிமுகம் செய்ய உள்ளது. இதில் ஹிமாலயன் 750 பைக்கில் 650 சிசி பேரரல் டிவின் ஏர் அல்லது ஆயில் கூல்டு இன்ஜின் இடம் பெற்றிருக்கும். இதுபோல், ஹிம் – இ எனப்படும் ஹிமாலயன் எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிளும் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
இதை முன்னிட்டு இதன் சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது. லடாக்கில் இந்த பைக்குகளின் சோதனை ஓட்டம் தொடர்பான படங்கள் இணையதளங்களில் வெளியாகியுள்ளன.