Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ராட்வீலர் நாய் கடித்ததில் 7 வயது சிறுமி படுகாயம்

சோழிங்கநல்லூர், ஜூலை 6: திருவள்ளூர் மாவட்டம், மப்பேடு கே.கே.நகர் பகுதியைச் சேர்ந்தவர் லலித்குமார் துர்கா பிரியா தம்பதி. இவர்களின் 2வது மகள் சந்திரிகா (6) இந்நிலையில் நேற்று முன்தினம் சந்திரிகா, பள்ளிக்குச்சென்று மாலையில் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது சிறுமி சந்திரிகா, ராட்வீலர் என்ற நாய் கட்டி வைத்திருந்த பகுதிக்குச்சென்று விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அப்போது, சிறுமி சந்திரிகா, நாய் மீது சிறிய கல்லை தூக்கி எறிந்துள்ளார். இதனால், மரத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த நாய், கயிற்றை அறுத்துக்கொண்டு வந்து சிறுமி சந்திரிகாவை பாய்ந்து கடிக்க துரத்தியது. இதனால், தாய் துர்கா பிரியா தனது மகளை தூக்கிக்கொண்டு, பிரியா வீட்டிற்குள் ஓடி மறைந்துள்ளார். பிரியா நாயை இறுக்கமாக பிடித்தும், நாய் கயிறை உருவிக்கொண்டு வீட்டில் பதுங்கி இருந்த சிறுமியை கடித்து குதறியுள்ளது. சிறுமியை நாய் கடித்து குதறுவதைக் கண்ட தாய், கத்தி கூச்சலிடவே அருகில் இருந்து ஓடிவந்த இளைஞர் ஒருவர், நாயை அடித்து விரட்டினார். பிறகு சிறுமியை மீட்டு திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிறுமி சிகிச்சை பெற்று வருகிறார்.