காய்ந்த அத்திப்பழம் – 1 1/2 கப்,
பாதாம் – 1/3 கப்,
வால்நட் – 1/3 கப்,
உலர் திராட்சை 1/3 கப்,
நட்மெக் பவுடர் – 1/4 டீஸ்பூன்,
ரோஸ் சிரப் – 2 மேசைக்கரண்டி,
ஏலக்காய் பொடி – 1/4 கப்,
காய்ந்த ரோஜா இதழ் – 1 கப்,
நறுக்கிய பேரீச்சை – 1 கப்,
முந்திரி – 1/3 கப்,
பிஸ்தா- 1/3 கப்,
குல்கந்து – 2 மேசைக்கரண்டி,
நெய் – 2 மேசைக்
கரண்டி, சோம்பு தூள் – 1/4 டீஸ்பூன்,
பனீர் – 1/2 கப்.
செய்முறை :
சூடான தண்ணீரில் காய்ந்த அத்திப் பழத்தை ஊறவைக்கவும். நன்கு ஊறியதும் தண்ணீரை வடிகட்டி அதனுடன் பேரீச்சை, உலர் திராட்சை, சிறிது பனீர் சேர்த்து மைய அரைக்கவும். பாதாம், முந்திரி, வால்நட், பிஸ்தா அனைத்தையும் பொடியாக நறுக்கவும். ஒரு பாத்திரத்தில் இரண்டு மேசைக்கரண்டி நெய் அதில் குல்கந்து சேர்த்து நன்கு வதக்கவும். இதனுடன் அரைத்த பேரீச்சை விழுது, நறுக்கிய பருப்பு வகைகள், நட்மெக் பவுடர் சேர்த்து நன்கு கிளறி அடுப்பில் இருந்து இறக்கவும். ஒரு பாத்திரத்தில் ரோஸ் சிரப், சோம்பு தூள், ஏலக்காய் தூள் சேர்த்து கலந்து வைக்கவும். பிறகு ஒரு தட்டில் நெய் தடவி, கலந்து வைத்துள்ள ரோஸ் சிரப் சேர்த்து அதன் மேல் காய்ந்த ரோஜா இதழ்களை தூவி அதன் மேல் பருப்பு கலவையினை சேர்த்து சமமாக பரப்பி விடவும் அதன் மேல் மீண்டும் ரோஜா இதழ்களை தூவி அப்படியே வைக்கவும். அனைத்தும் இறுகி வந்தவுடன் சின்னச் சின்ன துண்டுகளாக வெட்டி பரிமாறவும்.