Thursday, February 22, 2024
Home » ரோஜா பூங்காவில் செடிகளுக்கு இயற்கை உரமிடும் பணி தீவிரம்

ரோஜா பூங்காவில் செடிகளுக்கு இயற்கை உரமிடும் பணி தீவிரம்

by Lakshmipathi

ஊட்டி : கோடை சீசன் நெருங்கிய நிலையில், ரோஜா பூங்காவில் உள்ள ரோஜா செடிகளுக்கு இயற்கை உரமிடும் பணிகள் நடந்து வருகிறது.ஆண்டு தோறும் கோடை சீசன் போது ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் பொருட்டும், கவருவதற்காகவும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. இதில், முக்கியமான நிகழ்ச்சிகள் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் நடக்கும் மலர் கண்காட்சி,ரோஜா பூங்காவில் நடக்கும் ரோஜா கண்காட்சி மற்றும் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் நடக்கும் பழக்கண்காட்சியாகும்.

கோடை சீசன் நெருங்கிய நிலையில், நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள தாவரவியல் பூங்கா,ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா,காட்டேரி பூங்கா,மரவியல் பூங்கா மற்றும் தமிழகம் மாளிகை பூங்கா ஆகியவைகள் தீவரமாக நடந்து வருகிறது. ஆண்டு தோறும் மே மாதம் முதல் வாரத்தில் ரோஜா பூங்காவில் ரோஜா கண்காட்சி நடத்துவது வழக்கம்.

இதனால், இப்பூங்கா முன்னதாகவே தயார் செய்யப்படும்.மேல் பாத்திகளில் பிப்ரவரி மாதம் மலர்கள் பூக்கும் வகையில் கடந்த மாதம் ரோஜா செடிகள் கவாத்து செய்யப்பட்ட நிலையில்,தற்போது செடிகளை பராமரிக்கும் பணியில் பூங்கா ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.தற்போது நாள் தோறும் ரோஜா செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், ரோஜா செடிகளுக்கு தற்போது இயற்கை உரமிடும் பணிகளில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.ஏப்ரல் முதல் வாரத்திற்கு மேல் மொட்டுக்கள் காணப்படும். இரண்டாவது வார்த்திற்கு மேல் பூங்கா முழுவதிலும் உள்ள ரோஜா செடிகளில் மலர்கள் பூத்துவிடும். இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்லலாம்.

You may also like

Leave a Comment

17 − 10 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi