பனீர் ரோஸ் இதழ்கள் – 2 கப் (20 கிராம்),
ஏலக்காய் – 4,
முந்திரி – 20,
தேங்காய் துருவல் – 1 கப்,
காய்ச்சிய பால் – ½ லிட்டர்,
நாட்டுச்சர்க்கரை – 150 கிராம்.
செய்முறை:
ரோஜா இதழ்களை ½ டம்ளர் தண்ணீர்விட்டு நைசாக அரைத்துக் கொள்ளவும். பாலை காய்ச்சி ஆற வைக்கவும். முந்திரி, ஏலக்காய், தேங்காய் துருவல் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். கனமான பாத்திரத்தில் 1 டம்ளர் தண்ணீர் விட்டு காய்ந்தவுடன் முந்திரி, தேங்காய் துருவல், ஏலக்காய் அரைத்த விழுதை சேர்த்து நன்கு கலந்து வேகவிடவும். கெட்டியாகும் போது காய்ச்சிய பால், நாட்டுச்சர்க்கரை சேர்த்து கொதிக்க விடவும். நன்கு கொதித்த வுடன் இறக்கி அரைத்த ரோஜா விழுதை சேர்த்து நன்கு கலந்து மூடி வைக்கவும். சுவையான பனீர் ரோஜாப்பூ பாயசம் ரெடி. இதனை குளிர வைத்தும் பருகலாம். ரோஜாப்பூ மன அமைதியை கொடுக்கும்