திருமலை: தெலங்கானா மாநிலம், ரங்காரெட்டி மாவட்டம், மொய்னாபாத் கனகமாடி பகுதியில் டேபிள் டென்னிஸ் விளையாடுவதற்கான உள்விளையாட்டு அரங்கம் கட்டும் பணி நடந்து வருகிறது. ஒரே தூணில் புதிய தொழில்நுட்பத்துடன் உள்விளையாட்டு அரங்கம் அமைக்கும் பணியை ஒப்பந்ததாரர் மேற்கொண்டு வருகிறார். இப்பணியில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நேற்றும் வழக்கம்போல் கட்டுமான பணிகளில் 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டனர். தொடர்ந்து, மேற்கூரை சிலாப் அமைத்தபோது திடீரென இடிந்து விழுந்தது. இதில், 3 தொழிலாளர்கள் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். ேமலும், 10 தொழிலாளர்கள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.