துரைப்பாக்கம்: தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில், சில தினங்களுக்கு முன்பு சென்று கொண்டிருந்த காரின் மேற்கூரை திறக்கப்பட்டு, அதில், ஒரு காதல் ஜோடி நின்று கொண்டு, மது அருந்திக் கொண்டு ஜாலியாக சென்றது. இதில் சிலர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதவிட்டனர்.
இது வைரலாக பரவியது. போலீசார் விசாரணையில், பெருங்குடி வீரபாண்டிய கட்டபொம்மன் தெருவை சஞ்சய் (23), தனது காதலியுடன் மது அருந்தியபடி காரில் சென்றது தெரிந்தது. அவரை போலீசார் நேற்று கைது செய்தனர். அவர் சென்ற காரையும் பறிமுதல் செய்தனர்.