லக்னோ: உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் அப்னாதளம்(எஸ்) கட்சி எம்எல்ஏ வீட்டில் கொள்ளையடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உபியில் முதல்வர் யோகி தலைமையிலான பா.ஜ ஆட்சி நடக்கிறது. பா.ஜ கூட்டணி கட்சியாக அப்னாதளம்(எஸ்) கட்சி உள்ளது. இந்த கட்சியின் எம்எல்ஏ வினய்வர்மா. இவரது வீடு லக்னோ ஹஸ்ரத்கஞ்ச் பகுதியில் உள்ள பட்லர் பேலஸ் காலனியில் உள்ளது. இவரது வீட்டில் கொள்ளை நடந்துள்ளது. அவரது வீட்டில் குளியலறையில் இருந்த வாஷ்பேசின்கள் மற்றும் குளியலறை குழாய்கள் கொள்ளையடிக்கப்பட்டன. இந்த கொள்ளை குறித்து வினய்வர்மா எம்எல்ஏ கூறுகையில்,’ இவ்வளவு ஆடம்பரமான காலனியில் வசிக்கும் எம்.எல்.ஏ. வீட்டில் திருட்டு நடந்தால் என்ன சொல்வது?. கொள்ளை நடந்த சமயத்தில் நானும், என் குடும்பத்தினரும் இருந்திருந்தால், அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு, ஏதேனும் அசம்பாவிதம் நடந்திருக்கலாம். உபியில் சட்டம்,ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது’ என்றார்.
உ.பி.யில் எம்எல்ஏ வீட்டில் கொள்ளை
previous post