திருப்பத்தூர்: ஆண்டியப்பனூரில் பானிபூரி வியாபாரி வீட்டில் 30 சவரன், அரை கிலோ வெள்ளி, ரூ. 80,000 கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. பானிபூரி வியாபாரி தென்னரசுவின் வீட்டின் கதவை கடப்பாறையால் உடைத்து நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. ராஜபாளையத்தைச் சேர்ந்த தென்னரசு, புதுச்சேரியில் தங்கி பானி பூரி வியாபாரம் செய்து வருகிறார். புதுச்சேரியில் வியாபாரம் செய்துவரும் தென்னரசுவின் வீட்டை அவரது தாயார் பவளக்கொடி பராமரித்து வருகிறார்.