சென்னை: சென்னை போரூரில் இப்ராகிம் ஷா என்பவர் வீட்டில் கொள்ளையடித்த வழக்கில் 30 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவர் கைது செய்யப்பட்டார். 1993-ல் இப்ராகிம் ஷா வீட்டுக்குள் நுழைந்த 4 பேர் கொண்ட மர்மகும்பல் 30 சவரன், ரூ.15,000 கொள்ளையடித்துச் சென்றது. கொள்ளையில் ஈடுபட்ட முத்து, மகேந்திரன் ஆகியோரை போரூர் போலீஸ் கைது செய்து சிறையில் அடைத்தது. வழக்கில் 30 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த சக்திவேலை பெரும்பாக்கத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர்.