சென்னை: 36 வழக்குகளில் தொடர்புடைய பிரபல கொள்ளையன் மார்க்கெட் சுரேஷ் சென்னையில் கைது செய்துள்ளனர். சென்னை கீழ்ப்பாக்கம் தனியார் பள்ளியில் கைவரிசை காட்டிய வழக்கில் சுரேஷை போலீசார் கைதுசெய்தனர். கீழ்ப்பாக்கம் தனியார் பள்ளியில் முகமூடியுடன் புகுந்து முதல்வர், துணை முதல்வர் அறைகளை உடைத்து கொள்ளை அடித்து சென்றார். மடிக்கணினி, கையடக்கக்கணினி, 2 செல்போன், ரூ.20,000 ரொக்கத்தை கொள்ளையடித்து தப்பியோடியுள்ளார்.