சென்னை: மாநிலம் முழுவதும் மேற்கொள்ளப்படும் சாலைப்பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்ய முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். சாலைப்பணி பற்றி வாரந்தோறும் ஆய்வுக் கூட்டம் நடத்த தலைமை செயலாளருக்கு முதல்வர் ஆணையிட்டார். சாலைகளை விரைவாகவும், தரமாகவும் அமைக்க அமைச்சர்கள். அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுறுத்தினார்.