ஸ்ரீபெரும்புதூர்: காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரத்தில் இருந்து 3 டன் எடைகொண்ட கட்டுமான மரப்பொருட்களை ஏற்றிக்கொண்டு பெங்களூர் நோக்கி ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. சுங்குவார்சத்திரம் அடுத்த சேந்தமங்கலம் பகுதியில் சென்றபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையின் எதிர்திசை சாலையில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில், லாரியில் இருந்த 3 டன் மரப்பொருட்கள் அனைத்தும் தேசிய நெடுஞ்சாலையில் சிதறின. இதனால் பல மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவலறிந்து வந்த நெடுஞ்சாலை ரோந்து போலீசார், பொக்லைன் உதவியுடன் கவிழ்ந்த லாரியை மீட்டு போக்குவரத்தை சரி செய்தனர்.