ஸ்ரீபெரும்புதூர்: பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (24). இவர், கிருஷ்ணகிரியில் இருந்து 40 டன் எடையுள்ள இரும்பு ரோல்களை லாரியில் ஏற்றிக்கொண்டு சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தார். சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக ஸ்ரீபெரும்புதூர் ராஜிவ்காந்தி நினைவகம் அருகே சென்றபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையின் நடுவே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் லாரியை ஓட்டி வந்த ராஜ்குமார் அதிர்ஷ்டவசமாக சிறிய காயங்களுடன் தப்பினார். இந்த, விபத்தால் சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சாலையில் லாரி கவிழ்ந்து விபத்து: கடும் போக்குவரத்து நெரிசல்
37