செங்கல்பட்டு: செங்கல்பட்டு அடுத்த தண்டரை கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்டனர். தலைக்கவசம் அணிந்து வாகனம் ஓட்டுவது, செல்போனில் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுவது, இருவருக்கு மேல் இருசக்கர வாகனத்தில் செல்வதை தவிர்ப்பது, காரில் பயணிக்கும்போது காரை ஓட்டுபவர் உள்பட உடன் பயணிப்பவர்கள் என அனைவரும் சீட்பெல்ட் அணிந்து பயணிக்க வேண்டும். மேலும், அனைத்து சாலைவிதிமுறைகளையும் கடைபிடிக்க வேண்டும்.
சாலைவிதிமுறைகளை கடைபிடிக்காத பட்சத்தில் ஏற்படும் விபத்து மற்றும் ஆபத்து குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் யூத் ரெட் கிராஸ் சார்பில் செங்கல்பட்டு பழைய கலெக்டர் அலுவலகத்தில் இருந்து துவங்கிய விழிப்புணர்வு பேரணி அரசு மருத்துவமனை, ராட்டிணங்கிணறு உள்ளிட்ட முக்கிய சாலை வழியாக 200க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் கையில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்டனர்.