தண்டையார்பேட்டை: சென்னை தங்க சாலை பகுதியில் மயில் குஞ்சு ஒன்று சாலையில் சுற்றி திரிவதை பார்த்த பொதுமக்கள், அதை பிடித்து தங்கசாலை தீயணைப்பு துறை நிலைய அதிகாரி செந்தில்குமாரிடம் ஒப்படைத்தனர். அப்போது, அதன் முகத்தில் லேசாக காயம் இருந்தது தெரிந்தது. அதற்கு முதலுதவி சிகிச்சை அளித்து, வேளச்சேரியில் உள்ள வனத்துறை அலுவலகத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், வனத்துறை வேட்டை தடுப்பு காவலர் ஜெய் வினோத், மயில் குஞ்சை பெற்று வேளச்சேரி வன சரகத்திற்கு கொண்டு சென்றார். இந்த மயில் குஞ்சு எப்படி இங்கு வந்தது, கடத்தல் கும்பலின் கைவரிசையா என விசாரித்து வருகின்றனர்.