பூந்தமல்லி: பூந்தமல்லி கந்தசாமி நகரைச் சேர்ந்தவர் குணசேகரன். இவரது மனைவி புளோரா (55). இவர் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று காலை வழக்கம்போல் வேலைக்குச் செல்வதற்காக வீட்டில் இருந்து சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது பைக்கில் பின்னால் வந்த மர்ம நபர்கள் 2 பேர் புளோரா கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தங்கச் செயினை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர். இதுகுறித்து புளோரா பூந்தமல்லி போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.