செங்கல்பட்டு: செங்கல்பட்டு அடுத்த ஆத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ரத்தினம் என்பவரது மகன் ஆசிர்வாதம் (50). இவர் நேற்று ஆத்தூர் பகுதியில் சாலையோரம் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த பைக் ஆசிர்வாதம் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஆசிர்வாதம் பலத்த காயமடைந்த நிலையில், அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனில்லாமல் அவர் உயிரிழந்தார். இதனை தொடர்ந்து ஆசிர்வாதம் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து செங்கல்பட்டு தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.