சென்னை: சென்னையில் சாலைகள், தெருக்களில் மக்கள், வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக மாடுகள் சுற்றித் திரிந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். மாடுகள் பிடிக்கப்பட்டு அதன் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை போலீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை மாநகராட்சி அதிகாரிகளுடன் இணைந்து, மாநகர காவல்துறையும் நடவடிக்கை மேற்கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது.