தஞ்சாவூர்: பேராவூரணி அருகே நேற்று நடந்த சாலை விபத்தில் படுகாயமடைந்த ஆயுதப்படை பெண் காவலர் சுபபிரியா (23), சிகிச்சை பலனின்றி தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இன்று உயிரிழந்தார். நேற்றிரவு கோயில் திருவிழா பாதுகாப்பு பணிக்காக சாலையில் சக காவலர்கள் உடன் நடந்து சென்ற போது, மதுபோதையில் பைக்கில் வந்த தண்டாயுதபாணி என்பவர் மோதியதில், சுபபிரியா படுகாயம் அடைந்தார். சின்ன ரெட்டவயல் கிராமத்தைச் சேர்ந்த தண்டாயுதபாணியை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.