பெங்களூருவைச் சேர்ந்த எலக்ட்ரிக் வாகன உற்பத்தி நிறுவனமான ரிவர், புதிதாக ரிவர் இண்டி என்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. இதில், உள்ள மோட்டார், அதிகபட்சமாக 6.7 கிலோவாட் அவர் பவரையும் 26 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். அதிகபட்சமாக மணிக்கு 90 கி.மீ வேகம் வரை செல்லும். எக்கோ, ரைடு, ரஷ் என்ற மூன்று டிரைவிங் மோட்கள் உள்ளன. 4 கிலோவாட் அவர் பேட்டரி உள்ளது. 800 வாட்ஸ் சார்ஜர் மூலம் 5 மணி நேரத்தில் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்யலாம். முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 161 கி.மீ தூரம் வரை செல்லும். 14 அங்குல அலாய் வீல்கள். சீட்டுக்கு அடியில் 43 லிட்டர் கொள்ளளவு ஸ்டோரேஜ், முன்புறம் 12 லிட்டர் கிளோவ் பாக்ஸ், 6 அங்குல இடிஎன் டிஸ்பிளே ஆகியவை இதன் சிறப்பு அம்சங்கள். 3 வண்ணங்களில் கிடைக்கும். ஷோரூம் விலை சுமார் ரூ.1,39,335.
ரிவர் இண்டி எலக்ட்ரிக் ஸ்கூட்டர்
previous post