இங்கிலாந்து கிரிக்கெட் அணியுடான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் 134 ரன் குவித்த இந்திய அணியின் துணை கேப்டனும், விக்கெட் கீப்பருமான ரிஷப் பண்ட், 2வது இன்னிங்சிலும் அபாரமாக ஆடி 118 ரன் எடுத்தார். இதன் மூலம், 148 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரே போட்டியின் இரு இன்னிங்ஸ்களிலும் சதம் விளாசிய 2வது விக்கெட் கீப்பர் என்ற மகத்தான சாதனையை அவர் அரங்கேற்றி உள்ளார். இதற்கு முன், கடந்த 2001ல், தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஜிம்பாப்வே அணியின் விக்கெட் கீப்பர் ஆண்டி ஃபிளவர் இரு இன்னிங்சிலும் சதம் அடித்ததே இது வரை சாதனையாக இருந்து வந்தது. அந்த வரிசையில் தற்போது 2வது வீரராக பண்ட் இணைந்துள்ளார்.
148 ஆண்டுகளில் 2வது முறை ரிஷப் சாதனை மகுடத்தில் மேலும் ஒரு மாணிக்கம்: டெஸ்டில் பேக் டு பேக் சதம்
0