வரகுஅரிசி – ஒரு கப்
பாசிப்பருப்பு – அரை கப்
நெய், மிளகு, சீரகம் –
தலா ஒரு தேக்கரண்டி
பெருங்காயம் – சிறிது
இஞ்சி, பச்சைமிளகாய்,
கறிவேப்பிலை – சிறிது.
முந்திரி – 8.
செய்முறை
அரிசி மற்றும் பருப்பை சுத்தம் செய்து மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் ஊற வைக்கவும். குக்கரில் நெய் விட்டு பெருங்காயம், மிளகு, சீரகம், முந்திரி, இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு தாளிக்கவும். தாளித்தவற்றுடன் ஊற வைத்த பாசிப்பருப்பை சேர்த்து வதக்கிவிட்டு வரகுஅரிசியை சேர்த்து வதக்கவும். ஒரு கப் அரிசிக்கு 3 மடங்கு தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு கொதிக்க விடவும். கொதி வந்ததும் குக்கரை மூடி 4 விசில் வரும்வரை வேக விடவும். அரிசி வெந்து ஸ்டீம் அடங்கியதும் திறக்கவும். சுவையான சத்தான வரகு அரிசி வெண்பொங்கல் ரெடி.