முருங்கைப்பூ – 1 கப்,
அரிந்த வெங்காயம் – 50 கிராம்,
தக்காளி – 50 கிராம்,
பச்சைமிளகாய் – 4,
பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை – சுவைக்கு,
பூண்டு-இஞ்சி விழுது – 1 ஸ்பூன்.
சோம்பு ½ ஸ்பூன்,
புதினா அரிந்தது – ½ கப்,
நெய் – 4 ஸ்பூன்,
வடித்த சாதம் – 3 கப் (150 கிராம்),
உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
வாணலியில் நெய் விட்டு சோம்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை தாளித்து அரிந்த வெங்காயம் சேர்த்து வதக்கவும். அதில் நறுக்கிய பச்சைமிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கி அரிந்த தக்காளி, முருங்கைப்பூ, உப்பு போட்டு நன்கு வதக்கி, அதில் வடித்த சாதம் சேர்த்து நறுக்கிய புதினா போட்டு நன்கு கலந்து எடுத்தால் சுவையான முருங்கைப்பூ கலந்த சாதம் தயார். மிகவும் கால்சியம் சத்து நிறைந்தது.