பச்சரிசி மாவு – (ஊற வைத்து அரைத்து சலித்தது) – 3/4 கிலோ,
முட்டை – 4,
சர்க்கரை – 300 கிராம்,
ஏலக்காய்ப்பொடி – 1/4 டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கு,
எண்ணெய் தேவையான அளவு.
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக அடித்து பின் ஏலக்காய்த்தூள், சர்க்கரையை கொட்டி நன்றாகக் கலந்து கொள்ளவும். இந்தக் கலவையுடன் உப்பு, அரைத்த அரிசி மாவு சேர்த்து நன்றாகப் பிசையவும். பிறகு பிசைந்த மாவினை சப்பாத்திப் பலகையில் போட்டு சிறு சிறு உருண்டைகளாக உருட்டி தடிமனாக அப்பளம் போல் தட்டிக்கொள்ளவும். அதனை கத்தியினால் முக்கோண வடிவில் வெட்டி எடுக்கவும். ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி அடுப்பின் மேல் வைத்துக் (எண்ணெய்) காய்ந்ததும் வெட்டி வைக்கப்பட்டிருந்த துண்டுகளை போட்டு சிவக்க வெந்ததும் எடுக்கவும். இது 10 நாள் வரை கெடாது. வீட்டிற்கு வரும் விருந்தாளிகளுக்கு மாலை நேரங்களில் இந்த பச்சரிசி கேக்கை கொடுத்து பாராட்டை பெறலாமே!