ரிவோல்ட் நிறுவனம், ஆர்வி பிளேஸ் எக்ஸ் என்ற புதிய எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. இதில் 3.24 கிலோவாட் அவர் லித்தியம் அயன் பேட்டரி உள்ளது. இதிலுள்ள மோட்டார் அதிகபட்சமாக 4 கிலோவாட் அவர் பவரை வெளிப்படுத்தும். அதிகபட்சமாக மணிக்கு 85 கிலோ மீட்டர் வேகம் வரை செல்லும். முழுமையாக சார்ஜ் செய்தால் 150 கிலோ மீட்டர் தூரம் வரை செல்லலாம்.
அதிவேக சார்ஜர் வசதியும் உள்ளது. இதன்மூலம் 80 நிமிடங்களில் 80 சதவீதம் அளவுக்கு சார்ஜ் செய்யலாம். ஸ்டாண்டர்டு சார்ஜர் மூலம் சார்ஜ் செய்ய 3.5 மணி நேரம் ஆகும்.