பாட்னா: பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் டெல்லி பயணத்தால் எந்த மாற்றமும் ஏற்படாது, 3வது முறையாக மோடியே மீண்டும் பிரதமராவார் என்று பாஜ மூத்த தலைவர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். பீகார் முதல்வர் நிதிஷ்குமார் நேற்று டெல்லி சென்றார். இதன்போது அவர் எதிர்கட்சி கூட்டணியின் தலைவர்களை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜ மூத்த தலைவர் ரவி சங்கர் பிரசாத், ‘‘லாலு பிரசாத் யாதவ், நீங்கள் டெல்லி செல்லுங்கள், முதல்வர் பதவியை தேஜஸ்வியிடம் கொடுங்கள் என்று நிதிஷிடம் கூறி உள்ளார். ஆனால் அவர் முதல்வர் நாற்காலியை விடுவதற்கு தயாராக இல்லை.நிதிஷ் டெல்லி அல்லது மும்பை செல்வதால் எந்த மாற்றமும் ஏற்படாது. தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சி அமைத்துமோடி 3வது முறையாக மீண்டும் பிரதமராவார்” என்றார்.