சென்னை: அமமுக கட்சியின் பொது செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்ட சமூக வலைத்தள பதிவு: தமிழ்நாட்டில் இன்று முதல் நடைமுறைப்படுத்த உள்ள சுங்க கட்டண உயர்வுக்கான அறிவிப்பை திரும்ப பெறுமாறு ஒன்றிய அரசை வலியுறுத்துகிறேன்.சுங்க கட்டண உயர்வு என்பது வணிகர்கள், லாரி உரிமையாளர்கள் மட்டுமல்லாது, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து பொதுமக்களையும் கடுமையாக பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் வெளியிட்டுள்ள கட்டண உயர்வை திரும்ப பெறுவதோடு, தமிழ்நாட்டில் காலாவதியாகியும் இயங்கக் கூடிய சுங்கச் சாவடிகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு சமூக வலைத்தள பதிவில் கூறியுள்ளார்.