மதுரை: உரிமையாளருக்கு தெரியாமல் வருவாய் ஆவணங்களில் பெயர் மாற்றம் செய்த ஆவணங்களை ரத்து செய்ய கோரி வழக்கில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட பதிவாளர் தரப்பில் பதிலளிக்க உயர்நீதி மன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையை சேர்ந்த ஜெனிபர் ஜான் உயர்நீமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனு மீது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எங்களுக்கு சொந்தமான சொத்துக்கள் பெரியப்பா, அவரது மனைவி, மகள் பெயரில் மாற்றப்பட்டதாக மனுவில் புகார் அளிக்கப்பட்டது. எங்களுக்கு சொந்தமான பட்டாக்களை மற்றொருவருக்கு மாற்றம் செய்வதற்கான நிபந்தனைகளை கடைப்பிடிக்கவில்லை. முன்னோர் பெயரில் உள்ள சொத்துக்களை விதிமுறைகளை மீறி திருத்தம் செய்து வருவாய்ப்பதிவேடுகளில் மாற்றம் செய்துள்ளனர்.
முறைகேடாக வருவாய் ஆவணங்களில் பெயர் மாற்றி பட்டா மாற்றம் செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். முறைகேடாக பெயர் மாற்றம் செய்த பட்டாவை இரத்து செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டது. சிவகங்கை மாவட்ட ஆட்சியர், மாவட்ட பத்திரப்பதிவு அலுவலர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஐகோர்ட் கிளை ஒத்திவைத்தது.