நாகர்கோவில்: நாகர்கோவில் இருளப்பபுரம் சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் மனோகரன். மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி அனிதா (42). நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட வழங்கல் அலுவலகத்தில் வருவாய் ஆய்வாளராக பணியில் இருந்து வந்தார். உடல் நிலை சரியில்லாமல் 2 மாதங்களாக மருத்துவ விடுப்பில் இருந்து வந்த அனிதா நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவலறிந்து கோட்டாறு போலீசார் அனிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சில மாதங்களாக மன அழுத்தம் காரணமாக அனிதா சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர் தற்கொலை செய்தாரா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.