சென்னை: தமிழகத்தில் ஆணவக் கொலைகளைக் கட்டுப்படுத்த சிறப்புச் சட்டத்தை தமிழ்நாடு அரசு இயற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட 12 தீர்மானங்கள் விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது . சென்னை அசோக் நகரில் உள்ள விசிக தலைமை அலுவலகத்தில் அக்கட்சி தலைவர் திருமாவளவன் தலைமையில் உயர்நிலைக் குழு கூட்டம் நேற்று நடைபெற்றது.
மது மற்றும் போதைப் பொருள் புழக்கத்தை முற்றாக ஒழித்துக் கட்டுவதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். ஆணவக் கொலைகளைக் கட்டுப்படுத்த உச்ச நீதிமன்றம் ஆணையிட்டவாறு சிறப்புச் சட்டம் ஒன்றை தமிழ்நாடு அரசு இயற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட 12 தீர்மானங்கள் உயர்நிலைக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.