Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

குடிநீர் பராமரிப்பு கட்டண உயர்வை கண்டித்து அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள் சாலை மறியல்

*போலீசார் சமரச பேச்சுவார்த்தை

நாமக்கல் : நாமக்கல் -திருச்சி ரோடு எஸ்கே நகரில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளது. இந்த பகுதியில் 198 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இங்குள்ள ஒவ்வொரு குடும்பத்தினரிடமும், சங்கம் மூலம் குடிநீர் வரி, பராமரிப்பு செலவுக்காக மாதம் ரூ.100 வசூல் செய்யப்பட்டு வருகிறது. தற்போது, பராமரிப்பு கட்டணத்தை ரூ.250 ஆக உயர்ந்தியுள்ளனர். இதனால், அதிர்ச்சியடைந்த குடியிருப்புவாசிகள், இசங்க பொறுப்பாளர்களிடம் கேள்வி கேட்டுள்ளனர். அதற்கு அவர்கள் சரியான பதில் தெரிவிக்கவில்லை.

இதையடுத்து, குடியிருப்புவாசிகள் பரமாரிப்பு கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று நாமக்கல் -திருச்சி ரோட்டில் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த நாமக்கல் போலீசார், அங்கு மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினார். இதையடுத்து, அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால், சிறிது நேரம் மெயின் ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.