நத்தம்: திண்டுக்கல் மாவட்டம், நத்தம் – செந்துறை சாலை, கலைநகர் குடியிருப்பு பகுதி சாலையோர முட்புதருக்குள் சணலால் சுற்றப்பட்ட நிலையில் எறி வெடிகுண்டுகள் சிதறி கிடந்தன. தகவலறிந்து நத்தம் போலீசார் சென்று அங்கு கிடந்த 30 எறி வெடிகுண்டுகளை சேகரித்தனர். தடயவியல் அறிவியல் நிபுணர் சோதனை செய்தபோது, திருவிழாக்களில் பயன்படுத்தப்படும் பட்டாசு ரக எறி வெடிகுண்டு வகையை சேர்ந்தது என்பது தெரிந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து வெடிகளை சாலையோரம் வீசி சென்றதாக கலைநகரை சேர்ந்த மதன்குமார் (34), அவரது சகோதரர் மதிவாணன் (32) ஆகியோரை கைது செய்தனர்.
குடியிருப்பு பகுதியில் எறி வெடிகுண்டுகள் சகோதரர்கள் கைது
previous post