ராமநாதபுரம்: ராமநாதபுரம் ஆர்.எஸ்.மங்கலத்தில் புதிய நீர்த்தேக்கதொட்டி கோரிய வழக்கில் ஆட்சியர் அறிக்கைதர ஐகோர்ட் கிளை ஆணையிட்டுள்ளது. ஆர்.எஸ்.மங்கலத்தில் சேதமான 4 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை இடித்து புதிய தொட்டி கட்டி தர கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுதாரர் கோரிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.