தங்க நகைக் கடனுக்கான நிபந்தனைகளை ரிசர்வ் வங்கி கைவிட வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். நகைக் கடன் வாங்குவோர் நகைக்கான ஆதாரங்களை தர வேண்டும் என்ற நிபந்தனையால் மக்கள் பாதிப்பு. கடனை முழுமையாக அடைத்தால்தான் புதிய நகைக் கடன் தரப்படும் என்ற விதியும் மக்களை பாதிக்கிறது. நகைக் கடனுக்கான புதிய நிபந்தனைகளை மக்கள் நலன் கருதி ரிசர்வ் வங்கி திரும்பப் பெற வேண்டும் என்று கூறியுள்ளார்.