சென்னை: ரிசர்வ் தொகுதிகளையும் ஒழிக்கப் போகிறார்களா? என்று விசிக எம்.பி. ரவிக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். ரிசர்வ் தொகுதிகளை நீட்டிப்பது அரசமைப்பு சட்டத்தின் உறுப்பு 334-க்கு உகந்ததா? என்பதை ஆராய 5 நீதிபதிகள் கொண்ட அமர்வின் தீர்ப்பு இடஒதுக்கீட்டை முற்றாக ஒழிக்கும் இறுதி தாக்குதலாக இருக்கும். அம்பேத்கர் பெற்றுத் தந்த இடஒதுக்கீட்டை ஒழிக்கும் பாஜகவின் திட்டத்தை முறியடிக்க விசிக போராடும். EWS ஒதுக்கீட்டை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் விசிக வழக்கு நடத்தியது, உள்ஒதுக்கீடு தீர்ப்பை எதிர்த்தும் விசிக சீராய்வு மனு தொடர்ந்துள்ளதாக அவர் கூறினார்.