ஒன்றிய வங்கியான ரிசர்வ் பாங்க் ஆப் இந்தியாவில் 450 அசிஸ்டென்ட் பணியிடங்கள் காலியாக உள்ளன. பட்டப்படிப்பு படித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Assistant: மொத்த இடங்கள்: 450.
சம்பளம்: ₹20,700-55,700. வயது வரம்பு: 1.9.2023 அன்று 20 முதல் 28க்குள் இருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பில் எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத் திறனாளிகளுக்கு தலா 10 வருடமும் தளர்வு அளிக்கப்படும்.
தகுதி: குறைந்தது 50% மதிப்பெண்கள் பெற்று ஏதாவதொரு பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். கம்ப்யூட்டரில் பணிபுரியும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவால் நடத்தப்படும் ஆன்லைன் எழுத்துத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்.
எழுத்துத் தேர்வு முதல்நிலை தேர்வு (Preliminary Exam), பிரதான தேர்வு (Main Exam) என இரு கட்டங்களாக நடைபெறும். தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, நாமக்கல், சேலம், திருச்சி, நெல்லை, வேலூர் ஆகிய மையங்களில் முதல்நிலை தேர்வு நடைபெறும். முதல்நிலை தேர்வில் வெற்றி பெற்றவர்கள் மட்டும் இரண்டாம் கட்டத் தேர்வுக்கு அழைக்கப்படுவர்.
பிரதான தேர்வு (Main Exam) தமிழ்நாட்டில் சென்னை, கோவை, திருச்சி, நெல்லை, வேலூர் ஆகிய மையங்களில் நடைபெறும்.
கட்டணம்: பொது/ஓபிசி/ பொருளாதார பிற்பட்டோருக்கு ₹450/-. எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள்/ முன்னாள் ராணுவத்தினருக்கு ₹50/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
www.rbi.org.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: இன்று 4.10.2023.