சென்னை: ஆராய்ச்சி மாணவர்களை பேராசிரியர்கள் தரக்குறைவாக நடத்துவது தொடர்பாக உயர்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. “ஆராய்ச்சி மாணவர்களை தங்களது சொந்த பணிகளுக்கு பயன்படுத்தும் பேராசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பாதிக்கப்பட்ட ஆராய்ச்சி படிப்பு மாணவர்கள் ஆன்லைன் மூலம் புகார் அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அனைத்து பல்கலைக்கழக பதிவாளர்களுக்கும் உயர்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. ஆராய்ச்சி மாணவர்களை தங்களது வீட்டு வேலைகளை செய்யுமாறு பேராசிரியர்கள் துன்புறுத்துவதாக புகார் எழுந்ததன் அடிப்படையில் உயர்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
ஆராய்ச்சி மாணவர்களை பேராசிரியர்கள் தரக்குறைவாக நடத்துவது தொடர்பாக உயர்கல்வித்துறை எச்சரிக்கை
0