போர்பந்தர்: குஜராத்தில் போர்பந்தருக்கு அருகே கடலில் மோட்டார் டேங்கர் ஹரிலீலா என்ற கப்பல் சென்றுகொண்டிருந்தது. இந்த கப்பலில் இருந்த ஊழியர் ஒருவர் காயமடைந்ததாக தெரிகிறது. அவரை மீட்பதற்காக இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான இலகுரக ஹெலிகாப்டர் மீட்பு பணிக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
இதில் மொத்தம் நான்கு பேர் பயணம் செய்தனர். நேற்று முன்தினம் இரவு ஹெலிகாப்டர் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது.ஹெலிகாப்டரில் இருந்த ஒருவர் மீட்கப்பட்டுள்ளார். மேலும் 3 பேர் மாயமாகி உள்ளனர். அவர்களை தேடும் பணி நடக்கிறது.