கரூர், நவ. 11: கரூர் கோடங்கிப்பட்டி பகுதியில் கூடுதலாக தெருவிளக்கு வசதி அமைக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.கரூரில் இருந்து திண்டுக்கல், ஈசநத்தம், பாகநத்தம் போன்ற பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் அனைத்து பேரூந்துகள் மற்றும் வாகனங்கள் அனைத்தும் திருச்சி பைபாஸ் சாலையை கடந்து கோடங்கிப்பட்டி வழியாக சென்று வருகிறது.கோடங்கிப்பட்டியில் இருந்து பத்தாம்பட்டி வரை சாலையின் இருபுறம் தேவையான அளவு தெரு விளக்கு குறைவு காரணமாக இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் சாலையை கடந்து செல்வதற்கு மிகவும் அச்சப்பட்டு வருகின்றனர்.இந்த சாலையில், ஆபத்தான வளைவுகள் உள்ள நிலையில், குறிப்பிட்ட து£ரம் வரை வாகன ஓட்டிகளின் நலன் கருதி தெரு விளக்கு வசதி ஏற்படுத்தி தர தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பகுதியை பார்வையிட்டு தேவையான தெரு விளக்கு வசதிகளை அமைத்துதர நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.பெண்களின் நகைகள் திருடு போகாமல் தடுக்க கழுத்தைச் சுற்றிலும் துப்பாட்டா அல்லது சேலை மூலம் முழுமையாக துணிகளை சுற்றி கவசம் போல் கட்டிக் கொள்ளவேண்டும். அறிமுகம் இல்லாத நபர்களிடம் பேச்சுக் கொடுக்கக்கூடாது.