சென்னை: தீபாவளி பண்டிகையை ஒட்டி தமிழ்நாடு முழுவதும் நேற்று 364 அழைப்புகள் தீயணைப்புத்துறைக்கு வந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பட்டாசுகள் வெடித்து தீ விபத்து ஏற்பட்டதாக மொத்தம் 254 இடங்களில் இருந்து அழைப்புகள் வந்துள்ளன. தீ விபத்தில் சிக்கி, உள் நோயாளிகளாக 47 பேரும், புற நோயாளிகளாக 622 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னையில் மட்டும் பட்டாசுகள் தொடர்பான 102 அழைப்புகள் வந்துள்ளது என்று தீயணைப்புத்துறை தெரிவித்துள்ளது.