ருத்ரபிரயாக்: உத்தரகாண்டில் பழுது பார்ப்பதற்காக எடுத்து செல்லப்பட்ட ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியது. தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று தொழில்நுட்ப கோளாறு காரணமாக கடந்த மே மாதம் உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத் மலைப்பகுதியில் உள்ள இறங்குதளத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அதிலிருந்த 7 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
மே 24 முதல் பயன்பாடின்றி கிடந்த ஹெலிகாப்டரை சரி செய்ய முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து பழுதாகி நின்ற ஹெலிகாப்டர், இந்திய விமானப்படையின் எம்ஐ-17 ரக ஹெலிகாப்டர் மூலம் கயிறு கட்டி தூக்கி செல்லப்பட்டது. நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது எம்ஐ-17 ஹெலிகாப்டரில் கட்டப்பட்டிருந்த கயிறு அறுந்ததில், தனியாருக்கு சொந்தமான ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியது. இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்த சேதமும் ஏற்படவில்லை.
*உத்தரகாண்ட் மாநிலம் கேதர்நாத்தில் பழுதடைந்த ஹெலிகாப்டரை விமானப்படைக்கு சொந்தமான எம்ஐ 17 ஹெலிகாப்டர் கயிறு கட்டி தூக்கிச்சென்றது. அடுத்தபடம்: கயிறு அறுந்ததால் கீழே விழுந்து ஹெலிகாப்டர் நொறுங்கியது.