சத்தியமங்கலம்: பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்திற்கு மீண்டும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கீழ்பவானி கால்வாயில் கடந்த 15-ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் 47-வது மைல் பகுதியில் நீர்க்கசிவு ஏற்பட்டது. நீர்க்கசிவு தொடர்பாக தகவல் அறிந்ததும் கட்டுமான பகுதியில் நீர்வளத்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர். நல்லாம்பட்டி அருகே கால்வாயில் ஏற்பட்ட கசிவு சீரமைக்கப்பட்டதால் மீண்டும் பாசனத்திற்கு நீர் திறக்கப்பட்டுள்ளது. கீழ்பவானி கால்வாயில் 500 கன அடி நீர் முதற்கட்டமாக திறந்து விடப்பட்டுள்ளது