பெங்களூரு: ரேணுகாசாமி கொலை வழக்கில் நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா கவுடா உட்பட 7 பேருக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. கன்னட நடிகர் தர்ஷனின் ரசிகர் ரேணுகாசாமி கொலை வழக்கில் முதல் குற்றவாளியான தர்ஷன், 2வது குற்றவாளியான நடிகை பவித்ரா கவுடா உட்பட 17 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
தர்ஷன் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனு நேற்று கர்நாடக உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி விஸ்வஜித், நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா கவுடா, நாகராஜ், லட்சுமணன், ஜெகதீஷ், அனுகுமார், பிரதோஷ் ராவ் ஆகிய 7 பேருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.


