ரெனால்ட் நிறுவனம் மே மாதத்திற்கான வாகன தள்ளுபடி சலுகையை அறிவித்துள்ளது இதன்படி ரெனால்ட் டிரைபர், கிகர் மற்றும் கிவிட் ஆகிய கார்களுக்கு ரூ. 1 லட்சம் வரை தள்ளுபடி சலுகை கிடைக்கும். 7 சீட்கள் கொண்ட ரெனால்ட் டிரைபர் காரின் 2024ம் ஆண்டு மாடலை வாங்குவோருக்கு ரொக்க தள்ளுபடி ரூ.50,000, எக்ஸ்சேஞ்ச் போனஸ் ரூ.40,000 மற்றும் லாயல்டி உள்ளிட்ட சலுகைகள் சேர்த்து ரூ.1 லட்சம் வரை தள்ளுபடி கிடைக்கும்.
டிரைபர் கார் ஷோரூம் விலை சுமார் ரூ.6.15 லட்சம் முதல் ரூ.8.98 லட்சம் வரை. கிவிட் கார்களுக்கு எக்ஸ்சேஞ்ச் போனஸ் உட்பட ரூ.25,000 வரை ரொக்க தள்ளுபடி உட்பட பல்வேறு திட்டங்களின் கீழ் தள்ளுபடி சலுகை உண்டு. இந்த காரின் ஷோரூம் விலை சுமார் ரூ.4.7 லட்சம் முதல் ரூ.6.45 லட்சம் வரை. கிகர் கார்களுக்கு ரொக்க தள்ளுபடி ரூ.50,000 உட்பட சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன் ஷோரூம் விலை சுமார் ரூ.6.15 லட்சம் முதல் ரூ.11.23 லட்சம் வரை.