மதுரை: இந்து முன்னணி சார்பில் கடந்த ஜூன் 22ம் தேதி மதுரையில் நடந்த முருக பக்தர்கள் மாநாட்டில் ஐகோர்ட் உத்தரவை மீறி, மதவெறி, சமூக வெறுப்பை தூண்டும் விதமாக தலைவர்களின் பேச்சு இருந்தது. இதுகுறித்து மதுரை மாநகர் போலீஸ் கமிஷனர் லோகநாதனிடம் வக்கீல் வாஞ்சிநாதன், புகார் அளித்திருந்தனர்.
அதன்பேரில் விசாரணை நடத்திய மதுரை அண்ணாநகர் போலீசார், பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம், தென்னிந்திய தலைவர் பக்தன், ஆர்எஸ்எஸ் தென்னிந்திய தலைவர் வன்னியராஜன், இந்து முன்னனி மாநில செயலாளர் முத்துகுமார், சிரவை ஆதினம் குமரகுருபரசாமி ஆகியோர் மீது மதம், இனம் குறித்து பேசி பகைமையை உருவாக்குதல், மத உணர்வுகளை புண்படுத்தும் நோக்கில் பேசுதல், மத ரீதியாக புண்படுத்தி பேசுதல், பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்துதல் ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.