சென்னை: மதவாதம் என்பதைத் தவிர பா.ஜ.க.விடம் வேறு கொள்கை எதுவும் இல்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஆட்சிக்கு வந்தாலும், சாதனைகளைக் காட்டி பா.ஜ.க.வால் வாக்குகளைப் பெற முடியவில்லை எனவும் வெறுப்பரசியலை வைத்தே வாக்கு பெற நினைக்கிறார்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.