சென்னை: மத, சாதிய வெறுப்புணர்வை முறியடிக்க வேண்டும் என்று திமுக மாணவர் அணி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கல்வியின் குறிக்கோள் மூடநம்பிக்கையையும், முட்டாள்தனத்தையும் ஒழிப்பதாக இருக்கவேண்டும் என்பது பெரியார் கொள்கை. பெரியார் வழியில் திமுக அரசு கல்வித்துறையில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. அண்மைக்காலமாக ஆன்மிகத்தின் பெயரால் மாணவர்களிடத்தில் பரப்பப்படும் சாதிய, மதவாத உணர்வுகளை முறியடிக்க வேண்டும் என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.