மும்பை: ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் 46வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் மும்பையில் நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்ட பங்குதாரர்கள் மத்தியில் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி பேசியதாவது: நான் இந்த நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக மேலும் 5 ஆண்டுகளுக்கு பதவி வகிப்பேன். பதவியில் இருந்து விலகுவது தொடர்பாக 2021ம் ஆண்டு முதலே நான் சிந்தித்து வருகிறேன்.
கடந்த ஆண்டு எனது மகள் மற்றும் மகன்களுக்கு நிறுவன பொறுப்புகளை பிரித்து அளித்தேன். இவர்களுக்கு அடுத்த கட்ட பொறுப்புகளை வழங்கும் வகையில் இவர்கள் மூவரும் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் இயக்குநர் குழுவில் சேர்க்கப்பட்டுள்ளனர், என்றார். இதனால் இயக்குநர் குழுவில் இருந்து நீட்டா அம்பானி விலகியுள்ளார் என்றார்.