மும்பை: ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி அவரது நிறுவனத்தில் பணி புரியும் ஊழியர் ஒருவருக்கு ரூ.1,500கோடி மதிப்பிலான வீடு ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார். தன் நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளர்களை மரியாதையுடன் நடத்துபவர் என அறியப்படுபவர் முகேஷ் அம்பானி அவருடைய வலது கை என கருதப்படும் ரிலையன்ஸ் நிறுவன பணியாளர் மனோஜ் மோடி என்பவருக்கு மும்பையில் நேப்பியன் சீரோடு பகுதியில் ரூ.1,500கோடி மதிப்பிலான வீடு ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார்.
22 மாடிகள் கொண்ட இந்த வீடு 1 லட்சத்து 7 ஆயிரம் சதுர அடியில் அமைந்துள்ளது. மனோஜ் மோடியும், முகேஷ் அம்பானியும், மும்பை பல்கலை கழகத்தில் ஒன்றாக கெமிக்கல் டெக்னாலஜி பயின்றவர்கள் கடந்த 1980ஆம் ஆண்டு ரிலையன்ஸ் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்த மனோஜ் மோடி முகேஷ் அம்பானியின் குடும்பத்துடன் நெருங்கிய நட்புடன் இருந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது அவர் ரிலையன்ஸ் ரீடைல் மற்றும் ஜியோ நிறுவங்களின் இயக்குனராக உள்ளார். ரிலையன்ஸ் நிறுவனம் மேற்கொள்ளும் கோடி கணக்கான ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்களை இறுதி செய்வதில் மனோஜ் மோடி மிக முக்கிய பங்காற்றி வருவதாக கூறப்படுகிறது.